

சாருபாலா தொண்டைமான் - முன்னாள் மேயர், திருச்சி மாநகராட்சி.
காவிரியிலும் கொள்ளிடத்திலும் ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலங்களில் சராசரியாக ஆறு டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டித் தண்ணீரைச் சேமித்து வறட்சிப் பகுதிகளான கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை பகுதிகளுக்கு விநியோகிக்கலாம். அரசு பொதுத் துறை சார்பில் காமராஜர் ஆட்சியில் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகளைத் தவிர, வேறு எந்தத் தொழிற்சாலைகளும் அதன் பின்பு அமைக்கப்படவில்லை. அதனால், திருச்சி இன்னமும் பின்தங்கிய தொகுதியாகவே இருக்கிறது.
இந்திரஜித் - சி.பி.ஐ. மாவட்டத் தலைவர்.
திருச்சியைத் துணை தலைநகரம் ஆக்க வேண்டும் என்கிற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்ற வேண்டும். வட கோடியில் உள்ள சென்னைக்குச் செல்ல தென்கோடியில் உள்ள மக்கள் நிறைய சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இதைச் சரிசெய்ய முக்கிய அரசு அலுவலகங்கள் சிலவற்றை திருச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அல்லது அதன் கிளைகளை திருச்சியில் தொடங்கலாம். இதன் மூலம் சென்னையில் குவியும் மக்கள் நெரிசலையும் கட்டுப்படுத்தலாம்.