

முன்னாள் முதல்வர் அண்ணா காஞ்சிபுரத்தில் பிறந்தவர். அவர் இந்தத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றிபெற்றுள்ளார். உத்திரமேரூர் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தங்களை ஆள்வோரை குடவோலை முறையில் தேர்வுசெய்தனர் என்பதைப் பறைசாற்றுகின்றன. கடந்த காலங்களில் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ளன. அதனால், அரசியல் நோக்கர்களின் கவனத்துக்குள்ளாகும் தொகுதியும் இதுவே.