

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில் யோகா தீக்ஷா என்ற நிகழ்ச்சி, யோகா மைய ஒருங்கிணைப்பாளரின் இல்லத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. இதில் பங்கேற்ற ராம்தேவ் பத்திரிகை யாளர்களை வர வழைத்து பேட்டி அளித்தார்.
இந்நிலையில் தேர்தல் அதிகாரி களின் தடையை மீறியும், முன் அனுமதி பெறாமலும் பத்திரிகை யாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக, ராம் தேவ் மற்றும் யோகா மைய ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை மாவட்ட துணை தேர்தல் அதிகாரி விவேக் வத்சவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.