

சங்க காலத்தில் அதியமான் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக கிருஷ்ணகிரி இருந்தது. அப்போது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மைசூர் பகுதிகள் ஒருங்கிணைந்து தகடூர் நாடு அல்லது அதியமான் நாடு என்று அழைக்கப்பட்டது. முதலாம் மைசூர் போரின்போது, ஆங்கிலேயப் படைகள் கிருஷ்ணகிரி வழியாகக் காவிரிப்பூம்பட்டினத்துக்குச் சென்று, அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டன. அதில் ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்தனர். கிருஷ்ணகிரி தொகுதியில் ராஜாஜியின் மகன் சி.ஆர். நரசிம்மன் 1951 மற்றும் 1957-ல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.