

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "பாஜக தேர்தல் அறிக்கையில் பாதுகாப்புத் துறை மற்றும் குறிப்பிட்ட தனியார் துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை கொண்டு வர வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக் கொள்கையை பாஜக எதிர்க்கிறது. உலகில் உள்ள எந்த பன்னாட்டு நிறுவனமும் விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் இதுவரை செயல்பட்டதில்லை. இடைத்தரகர்கள் பெரும் நன்மைகள் அனைத்தையும் அன்னிய நிறுவனங்கள் பெருவது மட்டுமே சில்லறை வணிகத்தில் அன்னிய மூதலீடு ஏற்படுத்தும் பயனாக இருக்கும். இதில் இந்தியர்களுக்கு எந்த பயனும் கிடையாது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் தலையீட்டால் நாட்டின் உற்பத்தி திறன்தான் பாதுக்கப்படும். இந்தியாவில் உள்ள பன்னாட்டு கடைகளில் சீன பொருட்கள் மட்டுமே விற்க கூடிய நிலை ஏற்பட்டுவிடும்" என்றார் அருண் ஜேட்லி.