உங்க தொகுதி எப்படி இருக்கு? - சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
Updated on
1 min read

2011 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி

வென்றவர்: ஜெ. அன்பழகன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 64191

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: தமீமுன் அன்சாரி (மனிதநேய மக்கள் கட்சி)

பெற்ற வாக்குகள்: 54988

சேப்பாக்கம் , திருவல்லிக்கேணி இரண்டு தொகுதிகளாக கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் களம் கண்டது 2011 தேர்தலில் ஒரு தொகுதியாய் மாறிப் போனது. திமுகவின் ஜெ.அன்பழகன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது, சென்னை மாநகரில் மையப் பகுதியில் அமைந்திருந்தாலும் குப்பைகள் சரிவர அகற்றப் படாததும், திருவல்லிக்கேணியின் பல இடங்களில் கழிவு நீர் சாலைகளில் வெளியேறுவதும் மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. போக்குவரத்து வசதி வாய்ப்புக்கள், வேலை வாய்ப்பு ஆகியன மக்களின் மன நிறைவை ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in