அமேதியை கையாளத் தெரியாதவர் எப்படி நாட்டை வழி நடத்துவார்?: சத்தீஸ்கரில் ராகுல் காந்தி மீது மோடி தாக்கு

அமேதியை கையாளத் தெரியாதவர் எப்படி நாட்டை வழி நடத்துவார்?: சத்தீஸ்கரில் ராகுல் காந்தி மீது மோடி தாக்கு
Updated on
1 min read

தனது அமேதி தொகுதியை கையாளத் தெரியாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எப்படி நாட்டை வழி நடத்துவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

ராகுல் காந்தி வெற்றி பெறுவதை அமேதி தொகுதி மக்கள் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசி யதை குறிப்பிட்டு நரேந்திர மோடி இவ்வாறு பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் கூட்டத்தில் மோடி பேசியதாவது: ராகுலின் மைத்துனர் ராபர்ட் வதேராவின் சொத்து பெருமளவில் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசானது அம்மா-மகனின் ஆட்சி, தனது மகனை பார்த்துக் கொள்ளும்படி அமேதி தொகுதி மக்களை சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். அவர் எப்படி நாட்டை பார்த்துக் கொள்வார்? தனது மகனை பார்த்துக் கொள்ளும்படி மக்களிடம் கையேந்துகிறார் ஒருவர். அமேதி தொகுதியை கையாளத் தெரியாத அந்த நபர் எப்படி நாட்டை ஆளமுடியும்?

10ம் வகுப்பு படித்த நபர் ரூ, 1 லட்சம் கையில் வைத்துக் கொண்டு 3 ஆண்டுகளில் அதை ரூ. 300 கோடியாக பெருக்கியுள்ளார். இதுதான் அம்மா-மகன் ஆட்சி மாடல். 2 ஜி ஊழல் பற்றி கேட்டிருப் பீர்கள். இப்போது மைத்துனர் விவகாரத்தையும் கேளுங்கள். இத்தகைய நபர்களிடம் இந்த நாட்டை ஒப்படைப்பதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார் ராகுல். பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதி கம் நடக்கும் மாநிலங்கள் பட்டிய லில் முதல் 10 இடங்களை பெறு வது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் தான் என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in