

மக்களவை உறுப்பினர் நெப்போலியன் தரப்பில் பேசினோம். “எம்.பி. வாக்குறுதி கொடுத்தபடியே தொகுதியின் மையப் பகுதியான டோல்கேட்டில் எம்.பி. அலுவலகம் திறக்கப்பட்டது. பள்ளிகளுக்கான தளவாடப் பொருள்கள் வாங்குவது மற்றும் சாலைப் பணிகளுக்காகத் தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. தொகுதியின் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஆதரவற்றோர் தொழில் வாய்ப்புக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் தனிப்பட்ட முறையில் எம்.பி. செய்த உதவிகள் ஏராளம்” என்றனர்.