

2011 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம்
வென்றவர்: பழ. கருப்பையா (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 53920
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: அல்தாப் உசேன் (திமுக)
பெற்ற வாக்குகள்: 33603
நாடறிந்த நல்ல பேச்சாளர், எழுத்தாளார் பழ.கருப்பையா (அதிமுக) இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர். சென்னையின் முக்கிய பகுதிகளான பாரிமுனை, உயர்நீதி மன்றம், கோட்டை, செண்ட்ரல் என பல இந்த தொகுதிக்குள் அடக்கம்.
ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம் சரியாக நடக்கின்றது என்பதும், அருகாமையில் பள்ளி, கல்லூரிகள் அமைந்திருப்பதும் மக்களிடையே ஆதரவு வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. கழிவுநீர் மேலாண்மை , அரசு மருத்துவ வசதிகள் , மின் விநியோகம் என பல அம்சங்களுக்கும் மக்கள் மன நிறைவை பதிவு செய்துள்ளனர்.