

நரேந்திர மோடி திருமணத்தை மறைத்தது தொடர்பாக வந்துள்ள புகார் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை நடந்த தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பிறகு நிருபர் களிடம் அவர் கூறியதாவது:
நியாயமான, நேர்மையான, அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது, வாக்காளருக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக் காமல் தடுப்பது போன்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையிலோ, சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய பேச்சுக் களையோ பேசுவோர் மீது, வழக்கு பதிவதுடன் அவர்களது பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்படும்.
நரேந்திர மோடி, தனக்கு திருமணமானதை மறைத்தது தொடர்பாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து சட்டப்படி விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு வி.எஸ்.சம்பத் கூறினார்.