

ஆர். பொன்னம்பலம் - ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்.
குமரி ரயில் பாதைகளை மதுரைக் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது எங்களது நீண்டகாலக் கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்ட ரயில் நிலையங்கள் திருவனந்தபுரம் கோட்டத் தின் கீழ் இருக்கின்றது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தைப் பொறுத்தவரை வருவாயை மட்டும் குமரி ரயில் நிலையங்களில் இருந்து பெற்றுக்கொண்டு, வளர்ச்சிப் பணிகளைக் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களில் செய்கின்றனர். குமரி மாவட்டத்தின் மிகப் பெரிய ரயில் நிலையமான நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏ.டி.எம் வசதிகூட இல்லை.
வின்ஸ் ஆன்றோ - தலைவர், குமரி மாவட்டப் பாசனத் துறை.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட குளங்களைத் தூர்வார வேண்டும். ஏ.வி.எம். கால்வாயைச் சீரமைக்க வேண்டும். குழித்துறை தாமிரபரணி ஆறு, பழையாறு, வள்ளியாற்றில் இருந்து, கால்வாய் வழியாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுப்பணைகள் கட்டிச் சேமிக்க வேண்டும். உலக்கை அருவி அணை, முல்லையாறு பள்ளிக்கூட்டம் அணை உள்ளிட்ட சுமார் 40 சிறு அணைகளில் பணிகள் மேற்கொள்ள அரசு திட்ட மதிப்பீடு செய்து, பணிகள் தொடங்கப்படவில்லை.