தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்

தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 845 வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு தன்னார்வக் குழு அறிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தம் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தேசியத் தேர்தல் கண்காணிப்பு குழு தமிழக வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அந்த அமைப்பின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதர்சன பத்மநாபன் இந்த ஆய்வறிக்கையை சனிக்கிழமையன்று பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ கத்தில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். இவர்களில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஜேசுராஜ் தவிர்த்து மற்ற அனைவரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 178 பேர் கோடீஸ்வரர்கள். அதிகச் சொத்து மதிப்பு வைத்திருக்கும் கட்சி வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியினர் 39 சதவிகிதமும், அதிமுகவினர் 31 சதவிகிதமும் உள்ளனர். 21 வேட்பாளர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். +2 வரை மட்டும் படித்தவர்கள் 396 பேர்.

இதில் 104 பேர் குற்றப்பின்னணி உள்ள வர்கள். தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் இந்தக் குற்றப் பின்னணி உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொலை முயற்சி, மற்றும் கடத்தல் போன்ற கடுமை யான குற்றவியல் வழக்குகளில் 53 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். மொத்த வேட்பாளர்களில் 53 பெண் வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in