என்ன செய்தார் எம்.பி.?

என்ன செய்தார் எம்.பி.?
Updated on
1 min read

எம்.பி. தாமரைச்செல்வனிடம் பேசினோம். “தருமபுரியில் குண்டல்பட்டி கூட்டு ரோடு முதல் சேஷம்பட்டி கூட்டு ரோடு வரை சாலையை விரிவாக்கம் செய்ய ரூ.38 கோடி தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் ஒதுக்கப்பட்டு, அந்தப் பணி 90% முடிக்கப்பட்டுள்ளது. ரூ.58 லட்சத்தில் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மொரப்பூரில் ரூ.15 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம், தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் கட்டிடம், அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 5.5 லட்சத்தில் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. பாப்பிரெட்டிப்பட்டியில் வாணியாறு கால்வாய் ரூ.40 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட்டது. தம்மனம்பட்டி - லளிகம் சாலையில் ரூ.20 லட்சத்தில் பாலம் கட்டப்பட்டது. நங்கவள்ளி பகுதியில் திப்பட்டி கிராமத்தில் ரூ. 20 லட்சத்தில் பாலம் அமைக்கப்பட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in