

விஜயன் - மக்கள் சட்ட மைய இயக்குநர்:
நீலகிரியின் ஒரே பொதுத்துறை நிறுவனமான எச்.பி.எஃப். தொழிற்சாலையைப் புனரமைக்க வேண்டும். தொகுதி மக்களின் 25 ஆண்டு காலக் கோரிக்கையான சாதிச் சான்றிதழ் விரைவில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேயிலை உள்ளிட்ட தோட்டக் கலை விவசாயப் பொருட்களுக்கு நியாயமான, நிரந்தர விலையை நிர்ணயிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும்.
என். அர்ஜுனன் - தாளாளர், குருகுலம் பள்ளி:
நீலகிரி மாவட்டத்தில் 65,000-க்கும் மேற்பட்ட சிறு குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாகத் தேயிலைக்குக் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கப் போராடி வருகின்றனர். பசுந்தேயிலைக்கு மத்திய அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நீலகிரியின் ஒரே பொதுத் துறை நிறுவனமான எச்.பி.எஃப். தொழிற்சாலையைப் புனரமைக்காமல் இழுத்து மூடுவதிலேயே குறியாக இருக்கிறது மத்திய அரசு. இதனைப் புனரமைத்து நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். படுகர் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.