சந்தர்ப்பவாதிகள் உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது: நிதிஷ் குமார் மீது சோனியா மறைமுக தாக்கு

சந்தர்ப்பவாதிகள் உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது: நிதிஷ் குமார் மீது சோனியா மறைமுக தாக்கு
Updated on
1 min read

நேரத்துக்கு நேரம் மாறும் சந்தர்ப்பவாதிகள், மக்களின் உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது என்று சோனியா காந்தி கூறினார்.

மக்களவைத் தலைவர் மீரா குமாருக்காக பிஹார் மாநிலம் சாசாராம் நகரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாநில முதல்வர் நிதிஷ்குமாரை மறைமுகமாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது:

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், சமூக நல்லி ணக்கம் பேணப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் செய லாற்றி வருகிறது. நாட்டுக்கு எது நல்லதோ அதை காங்கிரஸ் நிறைவேற்றுகிறது. ஆனால் எதிர்க் கட்சிகள் (பாஜக) மக்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. சிலர் (நிதிஷ்குமார்) தங்கள் தவறுகளை மறைக்க காங்கிரஸ் மீது பழிசுமத்துகிறார்கள்.

ஆட்சியைப் பிடிப்பதற்காக அவர்கள் மக்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறார்கள். நேரத்துக்கு நேரம் மாறும் சந்தர்ப்பவாதிகள் மக்களின் உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

மக்களவைத் தலைவர் மீரா குமார் பேசியபோது, நாடு இப்போது ஒரு முக்கியமான சந்திப்பில் நின்று கொண்டிருக் கிறது, இந்த நேரத்தில் மதச் சார்பின்மை பாதையை தேர்ந்தெ டுப்பதா, மதவாத பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

பிஹார் மக்களவைத் தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கைகோத்துள்ளது. ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in