கோத்தர் இன குலதெய்வம் ‘சேலமரம்’

கோத்தர் இன குலதெய்வம் ‘சேலமரம்’
Updated on
1 min read

நீ

லகிரி மாவட்டத்தில் 7 பகுதிகளில் கோத்தரின பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் தலைமையிடமாக மஞ்சூர் அருகே அமைந்துள்ள குந்தா கோத்தகிரி கிராமம் கருதப்படுகிறது. இங்கு கோத்தரின மக்களின் வழிபாட்டு தலத்தில் தான் இந்த பிரம்மாண்டமான மரம் உள்ளது. சுமார் 40 மீட்டர் சுற்றளவு. பழமையான இந்த மரம் பற்றி கூறுகிறார், குந்தா கோத்தகிரி ஊர் தலைவர் பெள்ளன்.

“கோத்தர் இன பழங்குடியினர் இயற்கையைதான் வழிபடுகின்றனர். 6 குழுவினர் வசிக்கும் இடங்களில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள கோயில்கள் திறக்கப்படும். ஆனால், குந்தா கோத்தகிரியிலுள்ள கோயில் மட்டும் அறுவடை நேரத்திலும், உழவு காலத்திலும் திறக்கப்படுகிறது. நுழைவுப் பகுதியில் உள்ள சேல மரத்தைதான் குல தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்த ஊர் தோன்றியபோது, முதலில் கோயில் அமைப்பதற் காக முன்னோர்களால் முத லில் நடப்பட்டது இம்மரக்கன்றுதான் எனக் கூறப்படுகிறது. இதுவரை, இப்பகுதியில் 10 தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வசித்துள்ளனர்” என மரத்தின் வயதை விவரித்தார் பெள்ளன்.

தாவரவியல் ஆராய்ச்சியா ளரும் எமரால்டிலுள்ள மத்திய அரசின் மூலிகைப் பண்ணை இயக்குநருமான டாக்டர் ராஜன் இந்த மரம் குறித்து கூறும்போது, ‘இந்த மரம் தாவரவியலில் பைக்கஸ் பிரிவைச் சேர்ந்தது. இதுவும் அரச மரக் குடும்பம்தான். இந்த மரத்தின் வயது 100 ஆண்டுக்கு மேல் இருக்கும். முழுமையாக ஆய்வு செய்தால் மேலும் விவரம் தெரியவரும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in