

கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவால் விட்டு வென்றுகாட்டி மாநில தலைவர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர். மேற்குவங்கத்தின் வலிமையான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள திரிணமுல் காங்கிரஸ் பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை விடவும் அதிகமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.
மாநில உணர்வு, மொழி சார்ந்த பெருமையை முன்னிறுத்தி மம்தா பானர்ஜி செய்து வரும் அரசியல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை சேர்த்துள்ளது. கடந்த தேர்தலில் எதிரணியை சிதறிடித்து பெரும் வெற்றி பெற்றார் மம்தா பானர்ஜி.
2014- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (42) | வாக்கு சதவீதம் |
திரிணமுல் காங்கிரஸ் | 34 | 39.05 |
இடதுசாரிகள் | 2 | 29.71 |
காங்கிரஸ் | 4 | 9.58 |
பாஜக | 2 | 16.8 |
வரும் மக்களவை தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியை எதிர்பார்க்கும் மாநிலங்களில் மேற்கவங்கமும் ஒன்று. கடந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்றிய பாஜக தலைவர் அமித் ஷா, இந்த முறை மேற்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இடதுசாரிக் கட்சிகளின் வாக்குகள் கரைந்து வரும் நிலையில், மம்தா பானர்ஜிக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக பாஜகவை முன்னிறுத்த அமித் ஷா முயன்று வருகிறார். கடந்த தேர்தலில் 2 இடங்களில் வென்றபோதும், அக்கட்சி 16.80 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸுடன் கரம் கோர்த்துள்ள மம்தா பானர்ஜிக்கு பாஜக பெரும் சவாலாக விளங்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
2009- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (42) | வாக்கு சதவீதம் |
| காங்கிரஸ் கூட்டணி | ||
திரிணமுல் காங்கிரஸ் | 19 | 31.17 |
காங்கிரஸ் | 6 | 13.45 |
இடதுசாரிகள் | 15 | 29.71 |
பாஜக | 1 | 6.14 |