கள நிலவரம்: தஞ்சாவூர் தொகுதி யாருக்கு?

கள நிலவரம்: தஞ்சாவூர் தொகுதி யாருக்கு?
Updated on
1 min read

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்தத் தொகுதி, காவிரி டெல்டா பகுதி. காவிரி தண்ணீருக்காக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அதிகமாகக் கொண்ட பகுதி. உலகுக்கு சோறு வழங்கி சோழ வளநாடு தற்போது விவசாயம் செய்ய காவிரி தண்ணீருக்காகப் போராடி வருகிறது.

திமுகவின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் 5 முறை தொடர்ச்சியாக வென்ற தொகுதி இது. திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியே நேரடியாக களம் கண்டுள்ளது.

அதேசமயம் அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் பலமுறை இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.1977-ம் ஆண்டு இந்த தொகுதியில் வென்ற அதிமுக பல ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தமுறை  நாடளுமன்ற தேர்தலில் என்.ஆர்.நடராஜன் (தமாகா) எஸ். எஸ். பழநிமாணிக்கம் (திமுக), முருகேசன் (அமமுக),சம்பத் ராமதாஸ் (மநீம), கிருட்டிணகுமார் (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக, திமுக இரு கட்சிகள் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி

இதில்  திமுக, அதிமுக கூட்டணிக்குதான் போட்டி நிலவுகிறது.  இதில் திமுகவின் பழனி மாணிக்கம் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் களம் காண்கிறார். அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அமமுக வேட்பாளர் முருகேசன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 3-ம் இடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர்.நடராஜன் 4-வது இடம் பெற்று பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in