

திருப்பூர் நகரம் பின்னலாடைகள் நிறைந்த பகுதி. மற்ற பகுதிகள் விவசாயத்தால் சூழப்பட்டுள்ளன. திருப்பூர் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் டெபாசிட் இழந்தார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் எம்எஸ்எம் ஆனந்தனுக்கு நகர்ப்புறத்தில் மட்டுமே ஆதரவு அதிகமாக உள்ளது. தொகுதி மக்களுக்கு அவர் பணம் கொடுப்பார். ஆனால் அது போய்ச் சேருமா என்று தெரியவில்லை. குறுகிய காலத்திலேயே அமைச்சரான ஆனந்தன் மீது கட்சிக்காரர்களுக்கே கோபம் உள்ளது. தமிழக அரசின் சாதனைகளைச் சொல்லித்தான் ஆனந்தன் ஓட்டு கேட்கிறார். அதே நேரத்தில் ஆளுங்கட்சி அதிகாரமும் இரட்டை இலை சின்னமும் ஆனந்தனுக்குப் பக்க பலமாக உள்ளது.
திமுக சார்பில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய வருத்தத்தில் திமுகவினர் உள்ளனர். அமைச்சராக இருந்த ஆனந்தன், எம்.பி.யாக இருந்த சுப்பராயன் ஆகிய இருவருமே தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. இருபக்கமும் சம அதிருப்தி நிலவுகிறது. கடந்த காலங்களில் கிடைத்த வாய்ப்பை வீணடித்த கம்யூனிஸ்டுகளின் மீதும் அதிமுகவின் மீதும் மக்கள் கோபமாக உள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் செல்வத்துக்கு பவானி, பெருந்துறைப் பகுதிகளில் செல்வாக்கு அதிகம். சுமார் 1 லட்சம் வாக்குகளை செல்வம் பெறுவார் என்று கூறப்படுகிறது. திருப்பூருக்குள் அவருக்கு அதிக செல்வாக்கில்லை.
சுப்பராயனின் பிரச்சார வியூகம் நன்றாக இருந்தாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எம்எஸ்எம் ஆனந்தன் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியனை திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் முந்துகிறார். இதன்மூலம் நெல்லையில் திமுகவின் கொடி உயரப் பறக்கிறது. அதிமுகவின் மனோஜ் பாண்டியன் 2-ம் இடத்திலும், அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: