7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பா.ம.க. வேட்பாளர்கள் முதல்கட்ட பட்டியல் வெளியீடு: ஜி.கே.மணி அறிவித்தார்

7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பா.ம.க. வேட்பாளர்கள் முதல்கட்ட பட்டியல் வெளியீடு: 
ஜி.கே.மணி அறிவித்தார்
Updated on
1 min read

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி முதல்கட்டமாக 5 தொகுதிகளில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுகிறது. வேட்பாளர்களின் பெயர் விவரம் வருமாறு:

தருமபுரி - டாக்டர் அன்புமணி ராமதாஸ் (இளைஞரணித் தலைவர்,

மக்களவை உறுப்பினர்)

விழுப்புரம் - வடிவேல் ராவணன் (பொதுச் செயலாளர்)

கடலூர் - டாக்டர் இரா. கோவிந்தசாமி

அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி (முன்னாள் மத்திய அமைச்சர்)

மத்திய சென்னை -  சாம் பால்

ஆகியோர் போட்டியிடுகின்றனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இரண்டாம் கட்டமாக மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக விரைவில் அறிவிக்கும் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in