

கடம்பூர் ராஜூவை தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அதிமுக முன்னள் எம். எல்.ஏ மார்க்கணடேயன் பேசும்போது, ''கடம்பூர் ராஜூ எந்த தேர்தலிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்யவில்லை. அவரைத் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். கடம்பூர் ராஜூ மிரட்டலுக்குப் பயந்துதான் ஒபிஎஸ் எனக்கு சீட்டு தரவில்லை. ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு வழங்கியதே கட்சித் தலைமையை மிரட்டும் செயல்.
அதிமுக தலைமை மீது அதிருதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்'' என்று தெரிவித்தார்.
டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக அமைச்சர் கடம்பூர் ராஜூ செயல்படுவதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.