

கடும் வெயிலில் நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு போதிய நிழல், குடிநீர், மருத் துவ வசதிகளைச் செய்துதர வேண்டும். எந்த மனித உயிரும் பாதிக்கப்படக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பம் நிலவும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 26-ம் தேதி வரை அரசியல் கட்சிகளின் வேட் பாளர்கள், சுயேச்சைகள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள் வார்கள். அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே தேர்தல் பொதுக்கூட்டங்களும் நடத்தப் படும். இதில் பகலில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் கோடை வெப்பத்தில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அரசியல் கட்சி களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது:
இதற்கு முன்னர், கடும் கோடை காலத்தில் பகல் வேளையில் நடத்தப்பட்ட சில பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில், வெயில் பாதிப்பு காரணமாக சிலர் மரண மடைந்ததாகத் தகவல்கள் கிடைத் துள்ளன. எனவே, சூழல் கருதி கட்சிகள் கடும் வெயில் நேரத்தில் இதுபோன்ற பொதுக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்களை நடத்து வதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கூட்டம் நடக்கும் இடத்தில் போதிய நிழல் கூரை, குடிநீர், மருத்துவ வசதி களை ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு மனித உயிரும் மோச மான சூழலில் பாதிக்கப்படாத வகை யில் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத் தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறு கையில், பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் பங்கேற்கும் பொதுமக்க ளுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கும்போது, அதற்கான செலவுகள், வேட்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்’’ என்றார்.