

தமிழகத்தில் 4 முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச் சாரம் செய்வார். இதுகுறித்து பாஜக நிர் வாகிகளுடன் பேசி வருகிறோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களவைத் தொகுதி வேட் பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் நிலை யான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி தருவார் என ஒட்டுமொத்த மக் களும் தீர்மானித்துள்ளனர். தமிழகத் தின் வளர்ச்சி மிக சிறப்பாக இருப் பதற்காக அதிமுக தேர்தல் அறிக்கை யில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில் கூட் டணி பலத்துடன் 39 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவுகள் குறித்து சிலர் வெளியிடுவது கருத்துக்கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு.
நாங்கள் செய்வோம்
இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக் களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை தேர்தல் அறிக்கையாகவும், கோரிக் கையாகவும் வைத்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை செயல்படுத்த மாட்டார்கள். நாங்கள் சொல்ல மாட்டோம்; ஆனால் செய் வோம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வெறும் வெற்று அறிவிப்புகள்.
கோவையில் மெட்ரோ ரயில்
பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள 4 முக்கிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வார். இதுகுறித்து பாஜக நிர்வாகிகளுடன் கலந்து பேசி வருகிறோம். மெட்ரோ ரயில் திட்டம் 2-ம் கட்டமாக சென்னையில் செயல் படுத்த அனுமதி கேட்டுள்ளோம். அடுத்தபடியாக, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு அனுமதி பெற்று நிறை வேற்றுவோம்.
அமமுக-வை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை. அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்துள்ளதா? என்பதை தெரி விக்க வேண்டும். அவர்கள் தேர்த லில் போட்டியிடுவது, குழந்தை பிறக் காமலேயே பெயர் வைத்துள்ளதற்கு சமமானது. இவ்வாறு முதல்வர் கூறினார்.