காங்கிரஸ் புள்ளி வைத்தால் பாஜக கோலம் போடும்; இரு கட்சிகளும் ஒன்று தான்: சீமான் பேச்சு

காங்கிரஸ் புள்ளி வைத்தால் பாஜக கோலம் போடும்; இரு கட்சிகளும் ஒன்று தான்: சீமான் பேச்சு
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒன்று தான் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஷர்மிளா பேகம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் கவுரி ஆகியோரை ஆதரித்து, புதுச்செரியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (திங்கள்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது சீமான் பேசியதாவது: "பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சண்டை போடுவது போல தோன்றும். ஆனால், இரு கட்சிகளும் ஒன்று தான். நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அப்போது உடன் இருந்தது திமுக. நீட் தேர்வுக்கு பாராட்டி கடிதம் எழுதியது திமுக. நீட் தேர்வை செயல்படுத்தியது பாஜக. ஜிஎஸ்டியை முதன்முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை செயல்படுத்தியது பாஜக.

காங்கிரஸ் புள்ளி வைத்தால் பாஜக கோலம் போடும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த திட்டங்களை செயல்படுத்த  முடியவில்லை. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இந்த திட்டங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை உள்ளதால், பிரதமர் மோடி தன் இஷ்டத்துக்கு ஆடுகிறார்"

இவ்வாறு சீமான் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in