

தேமுதிக சார்பாக கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு விருதுநகர், சென்னை வடக்கு, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.
அதன்படி, விருதுநகர் தொகுதியில், தேமுதிக விசாரணைக் குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி போட்டியிடுகிறார்.
வடசென்னை தொகுதியில் தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.
திருச்சி தொகுதியில் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுறார்.