விதி மீறலா, பண நடமாட்டமா?- நீங்களும் தகவல் தெரிவிக்கலாம்

விதி மீறலா, பண நடமாட்டமா?- நீங்களும் தகவல் தெரிவிக்கலாம்
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிகளின்படி தனி நபர், வியாபாரிகள் ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்களின்றி எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் கொண்டுசெல்லப்படும் தொகைக்கு உரிய கணக்கு இருக்க வேண்டும். இந்நிலையில், பண நடமாட்டம் தொடர்பாக யார் வேண்டுமானாலும் வருமானவரித் துறைக்கு புகார் அனுப்பலாம் என்று அறிவிக்கப்

பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வருமானவரித்துறை

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 6669,

ஃபேக்ஸ்: 044 28262357, இ-மெயில்: itcontrol.chn@gov.in, வாட்ஸ்-அப் எண்: 94454 67707

தேர்தல் ஆணையம்

கட்டணமில்லா தொலைபேசி எண்:1950

கைபேசி செயலி: ‘cVigil’,  பண நடமாட்டம், நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக வீடியோவாக எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in