தமிழிசை - கனிமொழி: கோடீஸ்வர வேட்பாளர்கள்

தமிழிசை - கனிமொழி: கோடீஸ்வர வேட்பாளர்கள்
Updated on
1 min read

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பெயரில் மொத்தம் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து, பாஜக வேட்பாளர் தமிழிசை பெயரில் ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது.

கனிமொழியின் தெரிவித்துள்ள விவரம்: என் மீதான 6 குற்ற வழக்குகளில் 2 வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு, குற்றமற்றவர் என விடுவிக் கப்பட்டுள்ளேன். 3 வழக்குகளில் இன்னும் விசாரணை முடியவில்லை. இந்த வழக்குகளில் இன்னும் குற்றம்சாட்டப்படவில்லை. மேலும், ஒரு வழக்கு தனிநபர் புகார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் இருந்து இதுவரை சம்மன் வரவில்லை.

ரூ.30 கோடி சொத்து

கனிமொழி பெயரில் ரூ. 21,16,57,369 மதிப்பிலான ரொக்கப் பணம், வங்கி கையிருப்பு, தங்க, வைர நகை கள், கார்கள் போன்ற அசையும் சொத்துக்கள் உள்ளன. அவரது கணவர் அரவிந்தன் பெயரில் ரூ.3,83,223 மதிப் பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் என கனிமொழி பெயரில் மொத்தம் ரூ.8,92,20,000 மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. கணவர் அரவிந்தன் பெயரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன.

மொத்தம் கனிமொழி பெயரில் ரூ.30,08,72,362 கோடி மதிப்பிலான சொத்துக்களும், கணவர் பெயரில் ரூ.13,83,223 மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன. மேலும், கனிமொழி பெயரில் ரூ. 1,92,90,928 கடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழிசைக்கு ரூ. 2 கோடி

பாஜக வேட்பாளர் தமிழிசையின் சொத்து விவரம்: தமிழிசையிடம் கையிருப்பு ரூ. 50 ஆயிரம், 4 வங்கிக் கணக்குகளில் மொத்த இருப்பு ரூ. 5.60 லட்சம், ரூ.48,97,800 மதிப்பிலான நகைகள், ரூ. 10 லட்சம் ஆய்வ கம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஸ்கேனிங் மிஷின் உள்ளிட்ட ரூ. 1,50,07,600 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ. 50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. தமிழிசை பெயரில் மொத்தம் ரூ. 2,00,07,600 மதிப்பிலான சொத்துகள் மற்றும் ரூ. 1.87 லட்சம் கடன் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ.2,11,50,000 அசையும் சொத்துக்களும், ரூ. 6.80 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in