

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட் பாளர் வைத்திலிங்கம் அறிமுகப் படுத்தப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாரா யணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், திமுக அமைப்பா ளர் சிவா மற்றும் வேட்பாளர் வைத் திலிங்கம் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் நாராய ணசாமி பேசும்போது, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்க சாமி குறித்து மறைந்த ஜெய லலிதாவே விமர்சித்துள்ளார் என்று கூறி தனது செல்போனில் உள்ள ஒரு விடியோவை காண்பித்தார். கடந்த பொதுத் தேர்தலில், புதுச் சேரியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை விமர்சித்து பேசியதை நாராயணசாமி காண் பித்தார். விடியோவில் ஜெய லலிதா பேசியதை திமுக கூட்டத் தில் மைக்கில் ஒலிபரப்பிய பிறகு நாராயணசாமி தொடர்ந்து பேசி னார்.
‘‘2011 ம் ஆண்டு ஜெயலலிதா வோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்ற ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மறந்து அதிமுகவுக்கு துரோகம் இழைத்தார். இதை ரங்கசாமி மறந்திருந்தால் பரவாயில்லை. புதுச்சேரி மாநில அதிமுகவினரும் மறந்துவிட்டனர். இவர்கள் ரங்கசாமியுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டனர்'' என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.
காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்த கூட்டம் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி ஒரு மணியைத் தாண்டி நடைபெற்றது. பல மணி நேரம் தாமதமாக கூட்டம் தொடங்கி நீண்ட நேரத்துக்கு பின்னரே நாராயணசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பேசினர்.