தேர்தல் பிரச்சாரத்துக்கு முன் கோயிலில் வழிபட்ட பிரியங்கா காந்தி

தேர்தல் பிரச்சாரத்துக்கு முன் கோயிலில் வழிபட்ட பிரியங்கா காந்தி
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன் பிரியங்கா காந்தி கோயிலில் வழிபட்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பிரயாக் ராஜில் இருந்து வாரணாசி வரை தனது மூன்று நாள் யாத்திரையைத் தொடங்கினார் பிரியங்கா.

முன்னதாக பிரயாக் ராஜில் உள்ள கோயிலில் வழிபட்டார் பிரியங்கா. திரிவேணி சங்கமிக்கும் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்த அவர், கங்கையிலும் பூஜைகள் செய்தார்.

வரும் மக்களவைத் தேர்தலுக்காக ரயில், பேருந்து மட்டுமின்றி, பாத யாத்திரை மூலமாகவும் நீர்வழியாகவும் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரயாக்ராஜில் இருந்து படகில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார் பிரியங்கா காந்தி. கங்கை நதிக்கரையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் வசிக்கும்  பகுதிகள் வழியாக பிரச்சாரத்தை நடத்தும் பிரியங்கா, இறுதியாக பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

பிரியங்கா காந்தியின் பிரச்சார வியூகங்கள் உத்தரப் பிரதேச மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் ஆளும் பாஜக கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in