18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அதிமுக திமுக முனைப்பு காட்டி வருகிறது.

அதேநேரம்  ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில்  இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.

இந்நிலையில் 18 தொகுதிகளுக்கான விருப்ப மனு அளித்த வேட்பாளர்களை நேர்காணல் செய்த  அதிமுக நிர்வாகிகள் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலுடன் 18 தொகுதிக்கான வேட்பாளர்  பட்டியலையும் அறிவித்துள்ளனர்.

இன்று அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிக்கையாக வெளியாகியுள்ளது. 20தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தனித்தனியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் , இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்  இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் விபரம் வருமாறு:

பூந்தமல்லி- ஜி.வைத்தியநாதன்

பெரம்பூர்- ஆர்.எஸ்.ராஜேஷ்

திருப்போரூர்- திருக்கழுக்குன்றம். எஸ்.ஆறுமுகம்

சோளிங்கர்- ஜி.சம்பத்

குடியாத்தம்- (தனி) கஸ்பா.ஆர். மூர்த்தி

ஆம்பூர்- ஜெ.ஜோதி ராமலிங்க ராஜா

ஓசூர்- ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி

பாப்பிரெட்டிப்பட்டி- எ.கோவிந்தசாமி

அரூர் (தனி)- வீ.சம்பத்குமார்

நிலக்கோட்டை( தனி)- எஸ்.தேன்மொழி

திருவாரூர்- ஆர்.ஜீவானந்தம்

தஞ்சாவூர்- ஆர்.காந்தி

மானாமதுரை- (தனி) எஸ்.நாகராஜன்

ஆண்டிப்பட்டி- எ.லோகி ராஜன்

பெரியகுளம்- எம்.முருகன்

சாத்தூர்- எம்.எஸ்.ஆர் ராஜவர்மன்

பரமக்குடி- (தனி) என்.சதன் பிரபாகர்

விளாத்திகுளம்- பி.சின்னப்பன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in