மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி என விளம்பரம் வெளியிடுங்கள்: அன்புமணியை கடுமையாக சாடிய ஸ்டாலின்

மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி என விளம்பரம் வெளியிடுங்கள்: அன்புமணியை கடுமையாக சாடிய ஸ்டாலின்
Updated on
1 min read

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 'மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி' என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விளம்பரம் வெளியிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) திருமண விழாவொன்றில் கலந்துகொண்டு பேசினார். அதன் விவரம்:

திராவிட இயக்கத்தோடு என்றைக்கும் நாங்கள் கூட்டு வைக்க மாட்டோம் என சொன்னார்கள், நல்ல வேளை நம்மிடத்தில் அவர்கள் கூட்டு வைக்கவில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அதிமுகவோடு அவர்கள் கூட்டணி வைத்திருக்கின்ற காரணத்தால் அதிமுக திராவிட இயக்கம் இல்லை என்பதை நாட்டுக்கு வெளிப்படையாக சொல்லியிருக்கின்றார்கள்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாட்டில் ஒரு தலைவர் வெளியிட்ட விளம்பரத்தை காப்பியடித்து போட்டார்கள். 'மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி' என்று மூன்று வாசகம் போட்டார்கள். அது அப்பொழுது, இப்பொழுது இந்தத் தேர்தலில் மாற்றிப்போட வேண்டும். எப்படி என்றால் 'மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி' என்று.

ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாக ஒரு தேச துரோக கூட்டணியாக, மக்கள் விரோத கூட்டணியாக அது இன்றைக்கு அமைந்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி இல்லை இது 'பண நலக் கூட்டணி'"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in