பாமகவில் இருந்து விலகிய மறுநாளே அமமுகவில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்

பாமகவில் இருந்து விலகிய மறுநாளே அமமுகவில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்
Updated on
1 min read

பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் புதுச்சேரியில் தங்கியுள்ள டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் இணைந்தார்.

அதிமுக பாமகவுடனான கூட்டணி எதிரொலியால் - பாமக துணை தலைவர் பதவியில் இருந்து நடிகர் ரஞ்சித் விலகினார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) புதுச்சேரியில் தங்கியுள்ள டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் இணைந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், மாற்றம் முன்னேற்றம் என்று தமிழக மக்களை ஒருசிலர் ஏமாற்றி வருகின்றனர். தற்போது தன்மானத்தைவிட்டு ஒருசிலர் கூட்டணி சேர்ந்து வருகின்றனர். தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு அமமுகவில் இணைந்துள்ளேன். வரும்  தேர்தலில் தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

டிடிவி தினகரன் கூறுகையில், ஜெயலலிதா மறைந்த பிறகு அவர்களது தலைவர் யாரோ அவர்கள் படம் தான் தலைமை கழகத்தில் இடம்பெறும்..அதன் வெளிப்பாடே மோடி படம் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளது.

எஸ்டிபிஐ-க்கு ஒரு தொகுதி தரப்படும். யாருடனாவது கூட்டணி உடன்பாடு ஏற்பட்டால் அவர்களுக்கு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்படும். அப்படி இல்லையெனில் தமிழகத்தில் 38 தொகுதியில் அமமுக போட்டியிடும்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in