

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் வேட்பாளர் ஜெயப்பிரதா மற்றும் கட்சியின் மாவட்டத் தலைவர் அஜித் ரதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸார் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் நடிகையான ஜெயப்பிரதா. அவர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
இது தேர்தல் நடத்தை விதி மீறல் என அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
இதேபோல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு கட்டிடங்கள் மீது கட்சிக்கொடி ஏற்றியதாக பல்வேறு இடங்களில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.