நரேந்திர மோடியின் தூதர்கள் கிலானியை சந்திக்கவில்லை: பாஜக திட்டவட்ட மறுப்பு

நரேந்திர மோடியின் தூதர்கள் கிலானியை சந்திக்கவில்லை: பாஜக திட்டவட்ட மறுப்பு
Updated on
1 min read

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தூதர்கள் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானியை சந்திக்கவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பேட்டியளித்த ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் கிலானி, நான் டெல்லியில் இருந்தபோது நரேந்திர மோடியின் சார்பில் காஷ்மீர் பண்டிட்டுகள் இருவர் என்னை சந்தித்தனர், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மோடியை நேரில் சந்திக்க வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர், அவர்களின் அழைப்பை நான் நிராகரித்து விட்டேன் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தேசிய அரசியல் மற்றும் காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மறுப்பு

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் சனிக்கிழமை கூறிய தாவது: கிலானியின் தகவல் அடிப்படை ஆதாரமற்றது, நகைப் புக்குரியது. நரேந்திர மோடியின் சார்பில் எந்தத் தூதரும் கிலானியை சந்திக்கவில்லை. தவறான தகவலை வெளியிட்ட கிலானி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

ஒமர் அப்துல்லா கேள்வி

கிலானி, பாஜக இரு தரப்பில் யார் கூறுவது பொய் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த விவகாரத்தில் தன்னை சந்தித்த தூதுவர்கள் யார் என்பது குறித்து கிலானி வெளிப் படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும் என்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in