பாஜகவுக்காக தூது செல்லவில்லை: சஞ்சய் சாரப்

பாஜகவுக்காக தூது செல்லவில்லை: சஞ்சய் சாரப்
Updated on
1 min read

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, நரேந்திர மோடி மற்றும் பாஜகவிடமிருந்து எந்தத் தூதும் கொண்டு செல்லவில்லை என லோக் ஜனசக்தி இளைஞரணி தேசியத் தலைவர் சஞ்சய் சாரப் தெரிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந் துள்ளது. இதனிடையே, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானியை சஞ்சய் சாரப் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு, பாஜக மற்றும் மோடி சார்பிலான தூது என விமர்சனம் எழுந்தது.

இதனை சஞ்சய் சாரப் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கிலானிக்கும் எனக்கும் உள்ள உறவு தனிப்பட்ட முறையிலானது. நான் பாஜகவுக்காக எந்தச் செய்தியை யும் கிலானிக்குக் கொண்டு செல்ல வில்லை. கடந்த பல ஆண்டுகளாக நான் கிலானியைச் சந்தித்து வருகி றேன். பாஜகவுடன் பேச்சு நடத்து வதற்காக கிலானியிடம் நான் தூது சென்றதாகக் கூறப்படுவது முற்றிலும் அடிப்படையற்ற தகவல். கிலானி கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்காக டெல்லி சென்றதற்குப் பின் அவரை நான் சந்திக்கவே இல்லை. ஆகவேதான் அவரைச் சந்தித்தேன்.

பாஜகவின் இரு தூதர்களுள் நானும் ஒருவன் என ஊடகங்களில் செய்தி வெளியானது, எனக்குத் தொடர்பேயில்லாத ஒரு விஷயத்தில் என் பெயரை இழுக்க முயல்வதாகும் என்றார்.

மோடி தன்னிடம் 2 நபர்களைத் தூது அனுப்பியதாக கிலானி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in