

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், வேட்பாளர் களின் பிரச்சாரம் செவ்வாய்க் கிழமை (நாளை) மாலையுடன் ஓய்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி, மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆறாவது கட்டமாக, ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல் வேறு அரசியல் கட்சிகளின் வேட்பா ளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள் பட 845 பேர் களம் காணுகின்றனர்.
தமிழகத்தில் வாக்கு சேகரிப்புக்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே, வாக்குச் சாவடி களுக்கு வாக்களிக்க வரும் வாக் காளர்கள் வரிசையில் நிற்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் வாகனங்க ளுக்கு அனுமதி இல்லையென்ப தால், அந்த எல்லைப்பகுதியில் மரத்தினாலான தடுப்புடன் கூடிய சோதனைச் சாவடிகளை போலீஸார் அமைத்து வருகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் தேர்தல் ஊழியர் களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின் றன. வாக்குப்பதிவுக்கு முந்தைய தினமே வாக்குச்சாவடிகளுக்குச் செல்லுமாறு தேர்தல் ஊழியர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படவுள்ள சென்னையின் 3 இடங்கள் உள்பட 42 மையங்களிலும் முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.