வாக்காளர் அட்டை, பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?: பிரவீண்குமார் விளக்கம்

வாக்காளர் அட்டை, பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?: பிரவீண்குமார் விளக்கம்
Updated on
1 min read

புகைப்பட அடையாள அட்டையோ, தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் ஸ்லிப்போ (வாக்குச்சாவடி ரசீது) இல்லாதவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான மாற்று வழிமுறைகளைப் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:-

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது பூத் ஸ்லிப் கொண்டு வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறை, மேற்கண்ட இரு ஆவணங்களைத் தவிர்த்து, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பொதுத்துறை மத்திய, மாநில அரசுகள் பணியாளர்களின் அடையாள அட்டை, வங்கி புத்தகம் மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் (அனைத்திலும் புகைப்படம் இருக்க வேண்டும்), பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, தேசிய மக்கள் கணக்கெடுப்பு அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, தொழிலாளர் துறை வழங்கிய அட்டை, ஓய்வூதியதாரர் அட்டை, தேர்தல் கமிஷன் வழங்கிய போட்டோவுடன் கூடிய பூத் ஸ்லிப் போன்றவை மற்ற ஆவணங்களாகும். ரேஷன் கார்டை காட்டி ஓட்டுபோட இயலாது.

அரசியல் கட்சிகள் தரும் பூத் ஸ்லிப்பை வாக்குச்சாவடிக்கு கொண்டு வரலாம். அதில் கட்சி பெயரோ, சின்னமோ இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் தரும் பூத் ஸ்லிப்பை வைத்து வாக்காளர் எண்ணை சரிபார்க்கலாம். ஆனால் அதை வைத்து உரிமை கோர முடியாது.

6 மணிக்கு மேல் வந்தால்…..

தேர்தல் நாளான 24ம் தேதி மாலை 6 மணி வரைவாக்காளர்கள் வாக்கு அளிக்கலாம். மாலை 6 மணிக்குள் வருபவர்கள் வரிசை யில் நிறுத்தப்பட்டு, கடைசியில் நிற்பவருக்கு முதல் டோக்கன் வழங் கப்படும். பின்னர், அவருக்கு முன்னால் நிற்பவர்களுக்கு டோக் கன்கள் வரிசையாக வழங்கப்படும். டோக்கன் கிடைக்கப்பெற்ற அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in