

தமிழகத்தில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி போட்டியிடுகிறது என்று அதன் மாநிலத் தலைவர் க.ஜான்மோசஸ் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளின் ஆதரவுடன் திருவண்ணாமலையில் மாணிக்கவேல் ஆச்சாரி, கிருஷ்ணகிரியில் என்.எஸ்.எம்.கவுடா, நாமக்கல்லில் கலைவாணர் ஆகியோர் கதிர் சுமக்கும் பெண் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் மக்களை வாட்டி வதைக்கும் காங்கிரஸ், நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி, யாரையும் மதிக்காமல் தான் என்ற அகந்தையுடன் செயலாற்றும் ஜெயலலிதாவின் அதிமுக, ஊழலில் திளைத்த திமுக, சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை தோற்கடிக்கும் பணியை கட்சித் தொண்டர்கள் செய்வார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின் முதல்கட்டமாக நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர் என்றார் அவர்.