

அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை திமுகவைச் சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவர் அணி முன்னாள் செயலாளர் அ.தி.செந்தூரேசுவரன் ஆகியோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
ஆதரவு
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பம்மல் எஸ்.ராமகிருஷ்ணன், படையாச்சியார் பேரவையின் மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் தங்கள் சங்க நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு தங்களுடைய அமைப்புகளின் முழு ஆதரவை தனித்தனியே தெரிவித்தனர்.
முத்துக்குளித்துறை மக்கள் நலப் பேரவை என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் முதல்வரை சந்தித்து முழு ஆதரவை தெரிவித்தனர் என்று அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.