

சென்னை: தமிழில் ‘சாட்டை’ படம் மூலம் அறிமுகமானவர், மலையாள நடிகை மஹிமாநம்பியார். தொடர்ந்து மொசக்குட்டி, குற்றம் 23, மகாமுனி, ரத்தம், சந்திரமுகி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘நாடு’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் அவமானங்களைச் சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
சினிமாவில் அவமானங்கள் சகஜமானது. நாயகன், நாயகி வேறுபாடின்றிஎல்லோருமே ஒரு கட்டத்தில் அதற்கு ஆளாக நேரிடும். இருந்தாலும் சிலவற்றைமறப்பது கடினம். ஹீரோயின்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அவர்களுக்குவாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு மறுப்பது. படப்பிடிப்பு பாதி நடந்து முடிந்த பின்பும்,ஹீரோயின்கள், குணசித்திர நடிகர், நடிகைகள் நீக்கப்படுவது அதிகம் நடக்கின்றன.எனக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவில் ஒருபிரபல ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பிறகு அடுத்த ஷெட்யூலுக்கு அழைக்கிறோம் என்றார்கள். அழைக்கவே இல்லை.ஒரு நாள் அந்தப் படத்தின் மானேஜர் போனில் அழைத்து, அந்தப் படத்தில் பெரிய ஹீரோயின்ஒருவர் நடிக்கிறார். நீங்கள் இல்லை என்றார். நான் நீக்கப்பட்டதற்கானக் காரணம் தெரியவில்லை. பல நடிகைகள் தாங்கள் சந்திக்கும் அவமானங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான பலன் இல்லை.
இவ்வாறு மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார்.