

யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி மும்பையைச் சேர்ந்த செயின்ட் சேவியர் கல்லூரி முதல் வர், மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை சர்ச்சையை எழுப்பி யுள்ளது.
இதனிடையே, கல்லூரி முதல் வரின் சுற்றறிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது பாஜக.
வாக்களிக்கும் முன்னர், சரியான வகையில் புரிய வைப்பதே மாண வர்களுக்கு அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கையின் நோக்கம். இதில் தவறு ஏதும் இல்லை. இந்த அறிக் கையில் தனி நபரையோ அல்லது கட்சியையோ குறிப்பிட வில்லை. வேறு எந்த விவரமும் இல்லை என்று கல்லூரி முதல்வர் பிரேசர் மாஸ்கரன்ஹேஸ் தெரிவித்தார்.
இந்த சுற்றறிக்கையானது அவரது மாணவர்களுக்கு இ-மெயி லில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி இணையதளத்திலும் இடம் பெற்றுள்ளது. கலாச்சார ரீதியில் இரு துருவங்களாக மக்கள் பிரிந்து கிடப்பதும் மனித மேம்பாட்டு குறியீட்டெண்களும் கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களுக்கு அடையாளமாக உள்ளன. காங்கிர ஸின் உணவுப்பாதுகாப்புத் திட்டம், ரோஜ்கர் யோஜனா (வேலை வாய்ப்புத் திட்டம்) ஆகியவை பாராட்டத்தக்கவை.
இந்த திட்டங்கள் தேர்தல் கால சலுகை எனவும் வர்ணிக்கப் படுகிறது. ஆனால், இந்தியாவும் உலக நாடுகளும் பொருளா தார தேக்கநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில் இத்தகைய திட்டங்கள் அத்தியாவசியமானவை என சமூகவியல் அறிவியலாளர்கள் அமர்த்திய சென், ஜீன் டிரெஸ் உள்ளிட்டோர் ஆதரி்க்கின்றனர்.
இந்தியாவில் இழையோடி யுள்ள மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை மாணவர்கள் ஆதரிக்க வேண்டாம். முதலாளித்துவ மற்றும் வகுப்புவாத சக்திகளின் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு. நமது மதச் சாரபற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு உண்மையான அச்சுறுத்தல் தருவதாகும் என இ-மெயிலில் மாணவர்களுக்கு முதல்வர் அனுப்பிய சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
இதனிடையே, தேர்தல் நேரத் தில் இத்தகைய சுற்றறிக்கையை அனுப்புவதற்கான காரணம் என்னவென்று பத்திரிகை ஒன்றின் தரப்பில் கேட்டபோது கல்லூரி முதல்வர் கூறியதாவது:
குஜராத் மாடல் வளர்ச்சியையும் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை மதிப்பீடு செய்ய பரிசீலித்தேன். முடிந்தவரை இது நடுநிலையான மதிப்பீடுதான். வாக்களிக்கும்படி மாணவர்களை ஊக்குவிப்பது எனக்குள்ள பொறுப்பாகும்.
குஜராத் மாடல் பற்றி ஒவ் வொரு ஊடகமும் பெரிதாக விவாதிக்கின்றன. அதுதான் வெற்றிகரமான ஒன்றும் என்றும் முன் வைக்கின்றன. எனவே நானும் எனது கண்ணோட்டத்தை முன் வைத்துள்ளேன் என்று தெரி வித்திருக்கிறார் முதல்வர் பிரேசர் மாஸ்கரன்ஹேஸ்.
பாஜக புகார்
கல்லூரி முதல்வர் மாஸ்கரன் ஹேஸுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புதன் கிழமை புகார் மனு கொடுத்தது.
செயின்ட் சேவியர் கல்லூரி அரசு உதவிபெறும் கல்லூரியாகும். எனவே முதல்வரின் சுற்றறிக்கை தேர்தல் நடத்தை விதி மீறலா கும். மாணவர்களுடன் திறந்த விவாதத் துக்கு தயாராக இருக்கிறோம். தனது கருத்துகளை முதல்வர் வாபஸ் பெற்றிருக்கவேண்டும் என பாஜக மும்பை தலைவர் அஷீஷ் ஷேலர் புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.