

ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் ஜெய் ஒருங்கி ணைந்த ஆந்திரா கட்சித் தலைவ ருமான கிரண்குமார் ரெட்டி, இம்முறை தேர்தலில் போட்டியி டாமல் ஒதுங்கிவிட்டார்.
மத்திய அரசின் தெலங்கானா முடிவுக்கு எதிராக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கிரண்குமார், காங்கிரஸ் கட்சியை விட்டும் விலகினார். இதையடுத்து ஜெய் ஒருங்கினைந்த ஆந்திரா கட்சியை தொடங்கினார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பீலேர் தொகுதியில் போட்டியிடுவது வழக்கம்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான சனிக்கிழமை பீலேர் வந்த கிரண்குமார் மனு தாக்கல் செய்ய வில்லை. அவருக்கு பதிலாக அவரது தம்பி கிஷோர் குமார் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக திறந்த வாகனத்தில் இருந்து பொதுமக்களிடம் கிரண் குமார் பேசுகையில், “தெலுங்கு தேசம், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநிலத்தைப் பிரிக்க மத்திய அரசிடம் ஒப்புதல் கடிதம் கொடுத்ததால்தான் தற்போது இந்த நிலை ஏற்பட் டுள்ளது. ஆனால், இந்த கட்சி களின் தலைவர்கள் மக்களை திசைதிருப்பி நல்லவர்கள் போல் நடிக்கின்றனர். மாநிலம் பிரிக்கப் பட்டால் ஏற்படும் பாதிப்புகளை காங்கிரஸ் தலைவர்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
எனவே மாநிலப் பிரிவினைக்கு துணைபோன கட்சிகளுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள். நான் இம் முறை தேர்தலில் போட்டியிட வில்லை. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவேன்” என்றார்.