

தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் மற்றும் பி.பாலசுப்பிரமணியன், சுந்தரி ரங்கநாதன், சாந்தி சந்திரசேகரன், தமிழ்நாடு வட இந்தி யர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரிஷ் மேத்தா, வினோத், ராஜூ கோத்தாரி, ஜீன்ராஜ் ஜெயின், தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின் முறை கூட்டமைப்பைச் சேர்ந்த பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, ஆர்.பெருமாள், எஸ்.கே.தெய்வ ராஜ், கே.கிருஷ்ணசாமி உள்ளிட் டோர் தமிழக முதல்வர் ஜெய லலிதாவை நேரில் சந்தித்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது அமைப்புகள் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துக் கொண்டனர்.