“இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் கேட்டார்” - லோகேஷ் கனகராஜ் பகிர்வு

“இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் கேட்டார்” - லோகேஷ் கனகராஜ் பகிர்வு
Updated on
1 min read

சென்னை: “கதாபாத்திரத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த வார்த்தையை பயன்படுத்தினோம். இதை பேச வேண்டுமா? என விஜய் கேட்டார். இதற்கு நானே பொறுப்பேற்கிறேன்” என சர்ச்சைக்குரிய வசனம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் தகாத வார்த்தை இடம்பெற்றிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும். முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் சந்தேகமுடனே கேட்டார். நான்தான் கதைக்கு தேவையென கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன்.

ட்ரெய்லரில் அந்த இடத்தில் தேவைப்பட்டதால் வைத்தேன். யார் மனதையும் புண்படுத்த பயன்படுத்தவில்லை. இதற்கு முற்றிலும் நானே பொறுப்பேற்றுகொள்கிறேன். இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. லியோவில் பார்த்திபன் எனும் அந்தக் கதாபாத்திரம் பேசும் வார்த்தை தான்” எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in